பண்ணாரி குண்டம் விழா: மஞ்சள் நீராட்டுடன் நிறைவு
ADDED :2745 days ago
சத்தியமங்கலம்: பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா, நேற்று மஞ்சள் நீராட்டுடன் நிறைவு பெற்றது. சத்தியமங்கலம் அருகே, பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 3ல் நடந்தது. நேற்றுமுன்தினம், வெள்ளிபாளையம்புதூர், சிக்கரசம்பாளையம் கிராமங்களில் இருந்து, 500க்கு மேற்பட்ட பொதுமக்கள், மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி, ஊர்வலம் சென்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிலையில், நேற்று அம்மன் சப்பரத்தில் உலா சென்று, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. பக்தர்கள் குடங்களில், மஞ்சள் கலந்த தண்ணீரை, ஒருவருக்கு மேல் ஒருவர் ஊற்றிக்கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.