சீதா - ராமர் திருவீதி உலா
ADDED :2740 days ago
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்துார், சீதாராமர் பஜனை மடாலயத்தில், 80வது ஆண்டு ராமநவமி உற்சவ விழாவையொட்டி, பூந்தேரில் திருக்கல்யாண அலங்காரத்தில் சீதா ராமர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆத்தூர், பூங்கோலார் தெரு, சீதா ராமர் மடாலயத்தில், 80ம் ஆண்டு ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு, கடந்த, 25ல், 13 நாள் உற்சவ நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, சீதா - ராமர் திருக்கல்யாண கோலத்தில் திருவீதி உலா வந்தனர். நேற்று, ஆஞ்சநேயர் விடையாற்றி உற்சவம் நடந்தது.