பத்ர காளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2799 days ago
அந்தியூர்: பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. அந்தியூரில் பிரசித்தி பெற்ற, பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம், கடந்த, 15ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து மகிஷாசூரமர்த்தனம், கொடியேற்றுதல் நடந்தது. கடந்த, 4ல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து நேற்று மாலை, தேரோட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.,ராஜாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அந்தியூர், தவிட்டுப்பாளையம். வெள்ளையம்பாளையம், பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம், பவானி, பர்கூர் மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், 9 வரை தேரோட்டம் நடக்கிறது. பவானி டி.எஸ்.பி., சார்லஸ் தலைமையில், போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.