ஆதி மாரியம்மனுக்கு அபிஷேகம்
ADDED :2741 days ago
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன், வகையறா கோவில் திருவிழாவில், கம்பம் பிடுங்கும் விழா, இன்று நடக்கிறது. கம்பம் பிடுங்கும் முதல் நாள், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள, 120 ஆண்டுகள் பழமையான பெரியமாரியம்மன் உற்சவர், ஆதி மாரியம்மன் என, அழைக்கப்படும் அம்மனுக்கு அபி?ஷகம் செய்வது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அதன்படி, 16 திரவியங்களை கொண்டு நேற்று அபிஷேகம் நடந்தது. இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது: ஈரோடு பெரிய மாரியம்மனின் முதல் உற்வர் சிலை என்ற பெருமை பெற்ற, ஆதி மாரியம்மன் சிலை, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளது. இந்த சிலைக்கு, பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் எடுக்கும் வரை, அபி?ஷகம் செய்யப்படும். விழா நாளை (இன்று) நடப்பதால், இன்று (நேற்று), அபிஷேகம், நடந்தது. அதன்பின் மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது. இவ்வாறு கூறினார்.