வாகைதொழுவு அம்மன் கோவிலில் யாக வேள்வி
ADDED :2739 days ago
சென்னிமலை: சென்னிமலை அடுத்த, முருங்கத்தொழுவு கிராமத்தில், வாகைதொழுவு அம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கு மேலானதால், இங்கு யாக வேள்வி நடந்தது. கடந்த, 6ல் தொடங்கிய வேள்வி நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று, சுதர்சன பாராயணம், மித்ரு பாராயணம், உத்திரஜபம், யாககுண்ட ஹோமம் நடந்தது. பிரமலிங்கேஸ்வரர் கோவில் தலைமை குருக்கள் அமித்தலிங்க சிவாச்சாரியர் தலைமையில், 11 சிவாச்சாரியர்கள் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.