சிவகிரி பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா
ADDED :2797 days ago
கொடுமுடி: சிவகிரி கிழக்கு ரத வீதி, பகவதி அம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்தது. கடந்த, 6ல் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து கும்பம் தாழிக்கும் நிகழ்ச்சி, தீர்த்தம் மற்றும் அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. பொங்கல் வைத்த பெண்கள், மாவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். மாலையில் அம்மன் திருவீதியுலா நடந்தது. இன்று மாலை, அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.