உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி : அக்னி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி : அக்னி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

நாமக்கல்: நாமக்கல், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள அக்னி காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று மாலை, 4:30 மணிக்கு அக்னி காலபைரவருக்கு மஞ்சள், குங்குமம், தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட நறுமண திரவியங்களால் சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு ஏலக்காய், திராட்சை, தேங்காய் மற்றும் அதிரச மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதேபோல், உற்சவருக்கும் அபி?ஷகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திருவாசகம் பாடியும், தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகயவற்றில் நெய் தீபமேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

* குமாரபாளையம், காசிவிஸ்வேஸ்வரர் கோவிலில், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் சிறப்பு பஜனை நடத்தி, பக்தி பாடல்கள் பாடினர். காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !