உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளம்பி ஆண்டு எப்படி இருக்கும்!

விளம்பி ஆண்டு எப்படி இருக்கும்!

விளம்பி ஆண்டு ஏப்.14 சனிக்கிழமை காலை 6:56 மணிக்கு மேஷ லக்னத்தில் சனி ஓரையில் பிறக்கிறது. இந்த ஆண்டின் ராஜா சூரியன், மந்திரி சனி.  மேகாதிபதி சுக்கிரன் பலமாக இருப்பதால் தேவையான மழை பொழியும். ஆண்டு சனிக்கிழமை பிறப்பதால் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.   ஆண்டுக்கான தேவதை காமதேனு என்பதால் பால் உற்பத்தி பன்மடங்கு அதிகமாகும். விளம்பி ஆண்டில்  குருபகவான், ராகு-கேது பெயர்ச்சி அடைய இருக்கின்றனர்.  தற்போது குருபகவான் துலாம் ராசியிலும், சனிபகவான் தனுசு ராசியிலும், ராகு கடக ராசியிலும், கேது மகர ராசியிலும் இருக்கின்றனர்.  குருபகவான் 2018 அக்.5ல் விருச்சிகத்திற்கும், 2019 பிப்.10ல் தனுசு ராசிக்கும் மாறுகிறார்.  சனிபகவான் தனுசு ராசியில் ஏப்.28 முதல் செப்.11 வரை வக்கிரம் அடைகிறார்.  2019 பிப்.13ல் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ராகுவும்,  மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !