தேடி வரும் பெருமை
ADDED :2787 days ago
சீனாவில் வசித்த ஹட்சன் டெய்லர் என்ற போதகரைப் பற்றி, ஒருசமயம் இரண்டு தோழிகள் பேசிக் கொண்டிருந்தனர். “எப்போதாவது தனது சிறந்த சாதனைகளுக்காக டெய்லர் பெருமைப்பட்டிருப்பாரா?’ என்று அவர்களுக்குள் வாதம் ஏற்பட்டது. அதற்கான விடை அவர்களுக்கு தெரியவில்லை. எனவே டெய்லரின் மனைவியிடம் தங்களது சந்தேகத்தை கேட்டனர். அவருக்கும் இதற்கு பதில் தெரியவில்லை. எனவே டெய்லரிடமே தங்கள் சந்தேகத்திற்கு பதில் தரும்படி கேட்டனர். அதற்கு அவர், நான் பெருமைப்படும் படி எதையும் செய்யவில்லையே!” என்று கூறினார். அவரது பெருமைக்கான உண்மைக் காரணம் அப்போது தான் புரிந்தது. செய்ய வேண்டிய செயல்களை கடமையாக கருதி சிறப்பாகச் செய்தால், பெருமை தானாக தேடி வரும்.