இந்த வார பிரசாதம்
ADDED :2787 days ago
லட்சுமிக்கு பழப் பாயாசம்
தமிழ்ப்புத்தாண்டன்று லட்சுமிக்கு படைக்க வாழ்வு சிறக்கும்.
என்ன தேவை
பால் – 1/2 லிட்டர்
மில்க் மெய்டு – 200 மி.லி.,
பால் பவுடர் – 2 ஸ்பூன்
முந்திரி – 10
பாதாம் பருப்பு – 10
பன்னீர் – 100 கிராம்
ஏலக்காய் – 5
சாதிக்காய் – சிறிதளவு
சர்க்கரை – 300 கிராம்
திராட்சை – 100 கிராம்
ஆப்பிள் – 1
செய்வது எப்படி: பாதாமை வெந்நீரில் ஊற வைத்து தோல் உரித்து முந்திரியை சேர்த்து அரைத்து காய்ச்சிய பாலில் கலக்கவும்.
சாதிக்காய், ஏலக்காயை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். பால்பவுடரை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கொதித்ததும் மில்க் மெய்டு, காய்ச்சிய பால் சேர்க்கவும். ஆறிய பின் திராட்சை, நைசாக வெட்டிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்துப் பரிமாறவும்.