அட்சய திரிதியை கனகதாரா யாகம்
ADDED :2787 days ago
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள காலடியில் ஆதிசங்கரர் அவதரித்தார். இங்குள்ள திருக்காலடியப்பன் (கிருஷ்ணன்) கோயிலில் அட்சய திரிதியை முன்னிட்டு கனகதாரா யாகம் நடக்கிறது. ஏப்.16ல் யாகம் துவங்குகிறது. ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் விதமாக, 32 நம்பூதிரிகள் யாகத்தை நடத்துவர். லட்சுமி யந்திரம் வைத்து 10,008 கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்படும். ஏப்.18 அட்சய திரிதியை அன்று காலை 9:00 மணிக்கு தங்க, வெள்ளி நெல்லிக்கனிகளால் லட்சுமி, விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
பிரசாத நெல்லிக்கனிகளுக்கு...: அலைபேசி: 93888 62321, 93495 53051