நல்லவழி நான்கு
ADDED :2787 days ago
ஒருமுறை நாயகத்தின் நண்பர் ஒருவர், திடகாத்திரமான உடலுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மற்ற நண்பர்கள் நாயகத்திடம், “அண்ணலாரே! இவர் இவ்வளவு உடல்பலம் மிக்கவராக இருக்கிறார். இந்த பலத்தை மட்டும் இவர் நல்ல வழியில் பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றனர். அதற்கு நாயகம்,“தோழர்களே! அவர் தம் பச்சிளங்குழந்தையின் தேவைக்காகவோ, பெற்றோர்களின் பணிவிடைக்காகவோ சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது நல்வழி. நெறி கெட்ட வழியி லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சென்று கொண்டிரு க்கிறார் என்றால் அதுவும் நன்மைக்கே. ஆனால், புகழுக்காக சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது ஷைத்தானின் வழியாகும்,” என்றார். நாயகம் சொன்ன நல்ல வழியில் நாம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.