பெரியவர்களுக்கு மரியாதை
ADDED :2787 days ago
முதியோர்களை அவமதிக்கவோ, மரியாதை குறைவாகவோ நடத்தக்கூடாது. மரியாதை கொடுக்காதவர்களை நாயகம் கடுமையாக கண்டிக்கிறார். ‘நரைத்துப்போன, முதுமையடைந்த ஒருவரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இவ்வாறு நடத்துவது இறைவனையே கண்ணியப் படுத்தியது போலாகும்”. மேலும், ‘ஒரு வாலிபன் ஒரு முதியவருக்கு மரியாதை செலுத்தினால், அவனது வயோதிக காலத்தில் அவனுக்கு மரியாதை செலுத்த, அல்லாஹ் இப்போதே ஒருவனை தயார் செய்துவிடுவான். எனவே முதியோர்களுக்கு தகுந்த மரியாதை கொடுங்கள்,” என்றும் நாயகம் சொல்கிறார்.