இடைக்காட்டூரில் பாஸ்கு திருவிழா
ADDED :2802 days ago
மானாமதுரை: இடைக்காட்டூர் திருஇருதய ஆண்ட வர் திருத்தலத்தில் பாஸ்கு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது. பங்கு மக்கள் மற்றும் மதுரை சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை,மற்றும் பல மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.