உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை கோயிலில் பொங்கல் வழிபாடு

அருப்புக்கோட்டை கோயிலில் பொங்கல் வழிபாடு

 அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழாவில் பெண்கள் விரதமிருந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். இக்கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விரதமிருந்த பெண்கள் நேற்று, பக்தியுடன் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் பல பெண்கள் நேர்த்தி கடனுக்காக அங்கப் பிரதட்சணம் செய்தனர். குழந்தை வரம், திருமணம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுக்காக நேர்த்திகடன் பொம்மைகள் செலுத்தி வழிப்பட்டனர். கொடிமரத்திற்கு குடங்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிப்பட்டனர். இன்று அக்னி சட்டி, நாளை காலை பூக்குழி இறங்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !