அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :3064 days ago
சங்ககிரி: சங்ககிரி, பழைய இடைப்பாடி சாலையிலுள்ள, சிவியார் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15ம் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, பூங்கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று காலை, பொங்கல் விழா நடக்கிறது.