மேட்டுப்பட்டி பகவதியம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம்
ADDED :2846 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்துள்ள, மேட்டுப்பட்டி கிராமத்தில், பகவதி அம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் பஞ்., மேட்டுப்பட்டி கிராமத்தில், பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 8ல், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை, அம்மன் கரகம் பாலிக்கபட்டு சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை என, நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.