வீரமாச்சியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா
ADDED :2796 days ago
நெகமம்: நெகமம், வீரமாச்சியம்மன் கோவிலில் நேற்று, அம்மன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. நெகமம், அரசு மேல்நிலைப்பள்ளி ரோட்டில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், கடந்த, 6ம் தேதி திருவிழா துவங்கியது. சேத்துமடை, கப்பளாங்கரையில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.நேற்று காலை, 6.00 - 7.30 மணிக்குள் பக்தர்கள் முன்னிலையில், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. காலை, 9.00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலையில், பூவோடு எடுத்தலும் நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை, அபிேஷக பூஜையும் நடக்கிறது. விழா நடந்த நான்கு நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.