உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் கருமாரியம்மன் கோவில் விழா

மேட்டுப்பாளையம் கருமாரியம்மன் கோவில் விழா

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் விழா கடந்த மாதம், 27ல் பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த 3ல் அக்னி கம்பம் நடப்பட்டது. 10ம் தேதி இரவு பவானி ஆற்றிலிருந்து அலங்காரம் செய்த அம்மன் அழைப்பு நடந்தது. கோவிலில் அம்மனுக்கு அலங்கார அபிேஷக பூஜையும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. நாளை நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து திரிசூலம் எடுத்து வரப்படுகிறது. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !