ந.புதுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா: கழுமரம் ஏற்றம்
ADDED :2756 days ago
நத்தம்: நத்தம் அருகே ந.புதுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கழுமர ஏற்றம் நடந்தது. நேற்று முன்தினம் தோரணம் ஊன்றப்பட்டு அம்மனுக்கு பிடிமண் எடுத்து வரப்பட்டது. மந்தையில் இருந்து கரகாட்டம், வாண வேடிக்கை முழங்க சப்பரம் மற்றும் அலங்கார பொருட்கள் எடுத்துச் செல்லப்பட் டது. இரவு அம்மன் இருப்பிடம் வந்தடைந்தார். தொடர்ந்து குத்துவிளக்கு, மாவிளக்கு பூஜைகள் நடந்தது.நேற்று அதிகாலை வெண் கழுமரம் ஊன்றப்பட்டு பூஜாரி காவு குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் பால்குட ஊர்வலம் நடந்தது. பகலில் இளைஞர்கள் கழுமரம் ஏறினர். கிடா வெட்டையடுத்து மாலை 6:௦௦ மணிக்கு அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார். இரவு புராண நாடகம் நடந்தது.