உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

செல்வ விநாயகர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு செல்வ விநாயகர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு செல்வ விநாயகர் கோவிலில் காலையில் வரிசைகளுடன் நகர் வலமும், பிற்பகலில் அபிஷேகமும், சோட சோபசார மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் செல்வ விநாயகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வாணியர் சமுகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !