உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி

சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி

சின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக, பிடாரியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்திலேயே 6 கால பூஜைகள் நடைபெறும் கோயில் என்ற சிறப்பு பெற்றது சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில். முக்கிய நிகழ்வான சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது. துவக்க நிகழ்ச்சியாக பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, கோயில் நிர்வாக அலுவலர் அறிவுச்செல்வன் தலைமையில் நடந்தது. காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விரியன்சாமி முன்னிலை வகித்தார். நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் வேதநாயகம், தி.மு.க., விவசாய அணி மாவட்ட செயலாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏப்.20ல் கொடியேற்றம், 27 ல் சிவகாமியம்மன், பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாணம், 28 ல் சுவாமி, அம்மன் தேரோட்டம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !