கள்ளழகர் விழா தேதி மாற்றம் : காலண்டர் சங்கம் வருத்தம்
ADDED :2768 days ago
சிவகாசி: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் தேதி, தவறாக அச்சிட்டதற்கு தமிழ்நாடுகாலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 30ல் நடைபெறும் என கள்ளழகர் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், சிவகாசியில் அச்சிடப்பட்ட பெரும்பாலான காலண்டர்களில் ஏப்.29 என குறிப்பிட்டுள்ளது.இதற்காக, தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பஞ்சாங்க குறிப்பு, ஜோதிடர்கள் கணிப்புகள் அடிப்படையில் தான் தேதியை அச்சடித்தோம். கள்ளழகர் விழா தேதி மாறியதற்கு வருந்துகிறோம். இதுபோன்ற தவறு இனி நடக்காது என, காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதியளிக்கிறது, என்றார்.