உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 29ல் தீமிதி திருவிழா

ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 29ல் தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை: ராஜராஜேஸ்வரி அம்மன், பிரத்தியங்கிராதேவி மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 28ம் ஆண்டு, சித்ரா பவுர்ணமியை ஒட்டி, வரும், 29ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. பூண்டி ஒன்றியம், ஒதப்பை கிராமத்தில் உள்ளது, ராஜராஜேஸ்வரி அம்மன், பிரத்தியங்கிராதேவி மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம் பவுர்ணமி நாளில், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். 29ம் தேதி, இக்கோவிலில், 28ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, 24ம் தேதி துவங்கும் இவ்விழாவின் முதல் நாள், அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !