உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்றுகொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. விழாக்குழு தலைவர் முரளி கொடியேற்றி துவக்கி வைத்தார். ஏப். 23 முதல் 30ம்தேதி வரை மண்டகப்படிகளில் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்தங்கிஅருள்பாலிப்பார்.ஏப்.,27 காலை 8:00 மணிக்குமலர் வழிபாட்டு விழாவும், 9:00 முதல் 10 மணிக்குள் திருக்கல்யாணம்நடைபெறும். ஏப்.,29 ந்தேதி வேலப்பா பக்த சபையினரால்அம்மன் ஊஞ்சல் உற்ஸவமும், 30 ல் பூ பல்லக்கில் அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சியும், மே1ல் சக்தி கரகம் , மாவிளக்கு மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். மே 2ல் அக்னி சட்டி, பொங்கல் வைத்தல், பறவை காவடி நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. மே 8 ந்தேதியன்று மறுபூஜை, பாலாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சந்திரசேகரன், தக்கார் கணபதி முருகன், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர், ராஜேஷ்கண்ணா, பொறியாளர் ஸ்ரீவாரு முரளி மற்றும் கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம், இந்து முன்னணி, ஆனந்தகிரி இந்து இளைஞரணி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !