திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :2767 days ago
விழுப்புரம்: தோகைப்பாடி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழுப்புரம் அடுத்த தொகைப்பாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.அதனைத் தொடர்ந்து, கடந்த 6ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடந்தது. பின் தினமும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் இரவு வீதியுலா நடந்தது. கடந்த 14ம் தேதி பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து 15ம் தேதி மாலை 5:50 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில், விரதமிருந்த பக்தர்கள் தீமித்து, காணிக்கை செலுத்தினர். அதனை தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.