திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை
ADDED :2769 days ago
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யோகபைரவர் சன்னதி முன்பாக ஜெயந்தன் பூஜை கொண்டாடப்பட்டது. பூஜையை முன்னிட்டு ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.
இந்திரன் மகன் ஜெயந்தன் மகாராஜா பெண் ஆசையால் சாபம் பெற்றார். கொன்றை வனத்தில் யோகபைரவர் முன் தவமிருந்து விமோசனம் பெற்றார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் சித்திரை முதல் வெள்ளிக்கிழமையான இன்று திருத்தளிநாதர் கோயில் பைரவர் சன்னதியில் ஜெயந்தனுக்கு பூஜை நடந்தது. பெண்கள் மாவு விளக்கேற்றி பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து பகல் 11:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் நடைபெற்றது. பைரவருக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் யோகபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.