உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா

கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா

திருத்தணி : திருத்தணியில் நடந்த, கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழாவில், பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.திருத்தணி -- அரக்கோணம் சாலை, சுப்ரமணியபுரம் பகுதியில், கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா, நேற்று நடந்தது.உற்சவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது.அதன் பின், கல்யாண மாலை பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, நெமிலி குருக்கள் ரங்கநாதன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.முன்னதாக, பரிகார பூஜைகள் நடந்தன. இங்கு, ஒவ்வொரு மாதமும் கிருத்திகை விழா மறுநாள், ரோகிணி நட்சத்திரத்தில், கல்யாண உற்சவ பூஜை நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !