பழநியில் மகாருத்ர யாகபூஜை
ADDED :2769 days ago
பழநி, பழநியில் உலக மக்கள் நன்மைக்காவும், மழை வேண்டியும் மகாருத்ர யக்ஞம் யாகபூஜை மற்றம் சங்கரர் ஜெயந்திவிழா நடந்தது. பழநி அ.கலையம்புத்துார் அக்ரஹாரம் சீதாராம பஜனை சமாஜம் சார்பில், ஏப்.,16 முதல் ஏப்.,20 வரை வேதபாராயணமும், மகாருத்ர யக்ஞமும் நடந்தது. நேற்று ஸ்ரீ சங்கரர் ஜெயந்திவிழாவை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை, மகான்யாசம், ருத்ரேஹாம், ருத்ர ஜபம் நடந்தது. மாலையில் ஆதிசங்கரர் வீதிஉலா நடந்தது. டில்லி, சென்னை, பழநியைச்சேர்ந்த வேத விற்பன்னர்கள் பலர் பங்கேற்றனர்.