காஞ்சிபுரத்தில் ஆதிசங்கரர் தங்கத்தேரில் பவனி
காஞ்சிபுரம்: ஆதிசங்கரர் ஜெயந்தியை ஒட்டி, காஞ்சிபுரத்தில் நேற்று, ஆதிசங்கரர் தங்க தேரில் பவனி வந்தார். காஞ்சிபுரம் சங்கரமடம், தேனம்பாக்கம் சிவாஸ்தானம் ஆகிய இடங்களில், ஆதிசங்கரர் ஜெயந்தி மகோற்சவம், ஏப்., 16ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தினமும் காலையில், ஆதிசங்கரருக்கு விசஷே அபிஷேகம், தீபாராதனையும், ஆவஹந்தி ஹோமம், ஆதிசங்கரர் வீதி புறப்பாடும் நடந்து வந்தது. அவரின் ஜெயந்தி தினமான நேற்று காலை, ஆவஹந்தி ஹோமம், விசஷே அபிஷேகம், அவதார கட்டம் வாசித்தல், தீபாராதனை, மந்திர புஷ்பம் நடந்தது. மேளதாளம் மற்றும் பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க, இரவில், அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில், ஆதிசங்கரர் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தேர் மீண்டும் சங்கரமடத்தை அடைந்ததும், தீபாராதனை, மந்திர புஷ்பம் நடந்தது.