உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை

18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை

ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் நேற்று 18 ம் நாள் போர்க்கள நிகழ்வு நடந்தது. இதில், துரியோதனனை பீமசேனன் வெற்றி கொண்ட நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். ஆர்.கே.பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனனை பீமசேனன் வெற்றி கொண்டார்.

துரியோதனன் குருதியை கூந்தலில் தடவி தன் சபதத்தை திரவுபதி நிறைவேற்றினார். ஏற்கனவே, 99 புதல்வர்களை இழந்த காந்தாரிதேவி, நேற்று தன் மூத்த மகன் தரியோதனனையும் பறி கொடுத்தார். புத்திர சோகத்தால் தவித்த காந்தாரி, போர்க்களத்தில் குழுமியிருந்த பக்தர்களை, துடைப்பத்தால் நைய புடைத்தார். அதை தொடர்ந்து நித்திய தீர்த்தவாரிக்கு, திரவுபதியம்மன், கிருஷ்ணர், பஞ்ச பாண்டவர் .உற்சவ மூர்த்திகள் புறப்பட்டனர். உடன், நுாற்றுக்கணக்கான பக்தர்களும் சென்றனர். மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரவுபதியம்மனுடன், பக்தர்கள் அக்னி பிரவேசம் செய்தனர்; இன்று பட்டாபிஷே கம் நடக்கிறது. இரவு தர்ம ராஜா நகர்வலத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !