உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து

திருப்பதி:திருமலையில், நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனத்தை, வார இறுதி நாட்களில், தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்குவோருக்கு, தேவஸ்தான நிர்வாகம், ஆண்டிற்கு ஒரு முறை, தரிசன வசதியை அளித்து வருகிறது. ஆனால், தற்போது திருமலையில் கோடை விடுமுறை காரணமாக, பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். அதனால், ஏழுமலையான் தரிசனத்திற்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதையடுத்து, கோடை விடுமுறை முடியும் வரை, வார இறுதி நாட்களில், நன்கொடையாளர்களுக்கு வழங்கும் தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதேபோல் இந்த நாட்களில் பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும், வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தையும், தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !