சேதுக்கரை அகத்தியர் தீர்த்தக்குளம் துாரெடுக்கும் பணி துவக்கம்
ADDED :2766 days ago
கீழக்கரை: சேதுக்கரை சின்னக்கோயில் ஸ்ரீனிவாசப்பெருமாள், அகத்தியர், வெள்ளைப்பிள்ளையார் கோயில் அருகே அகத்தியர் தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித மராமத்து பணிகளும் இன்றி சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இறால் பண்ணைகளின் தாக்கத்தால், அகத்தியர் தீர்த்தக்குளத்தின் தண்ணீர் மாசுபட்டும், பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. கடந்தாண்டு தினமலர் நாளிதழில் அகத்தியர் தீர்த்தக்குளத்தின் சிறப்பம்சம் குறித்த செய்தி வெளியானது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், 53 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தை துார்வாறும் பணி தொடங்கியது.