துலுக்கானத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2766 days ago
நெட்டப்பாக்கம்: சொர்ணாவூர் கீழ்பாதி துலுக்கானத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தில் உள்ள செல்வ கணபதி, பாலமுருகன், துலுக்கானத்தம்மன் கோவில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, காலை 7 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், 108 மூலிகையினால் சன்னமதி ஹோமம் நடந்தது. காலை 10 மணிக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை சொர்ணாவூர் கீழ்பாதி கிராம மக்கள் செய்திருந்தனர்.