உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் உய்யவந்தாள் அம்மன் பூச்சொரிதல் விழா

எமனேஸ்வரம் உய்யவந்தாள் அம்மன் பூச்சொரிதல் விழா

பரமக்குடி : பரமக்குடி உய்யவந்தாள் அம்மன் கோயிலில்பொங்கல், அக்னிச்சட்டி, பூச்சொரிதல், பொங்கல் விழா நடந்தது. முன்னதாக ஏப். 11ல் மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, 7:00 மணிக்கு மேல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனை, தீபாராதனை நடந்தது. ஏப்.,20 காலை 8:00 மணி முதல் பொங்கல் விழாவும், மதியம்4:30 மணிக்கு வைகை ஆற்றில் அக்னி வளர்த்தல், சேத்தாண்டி வேடம் அணிந்துநேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் மாலை 6:00 மணிக்கு ஊர்வலமாக வந்தனர்.நேற்று காலை 6:00 மணிக்கு பால்குடம் வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டு, சிறப்புஅபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !