ராம நாமம் ஜெபித்தால் கோடி புண்ணியம்
ADDED :2766 days ago
தொண்டாமுத்துார்:கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தியாக பிரம்ம கானாஞ்சலி இணைந்து, தியாகராஜ பாகவதரின் 251வது ஜெயந்தியை சிறப்பிக்கும் வகையில், ராம பக்தி ரசம் என்ற தலைப்பில், ஆன்மிக உற்சவ கீர்த்தனை நேற்று நடந்தது.கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், உடையாளூர் கல்யாண ராம பாகவதர் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று, தியாகராஜ பாகவதரின் உற்சவ கீர்த்தனைகளை பாடினர். இதில், உடையாளூர் கல்யாண ராம பாகவதர் பேசுகையில்,தியாகராஜ பாகவதர், 24 ஆயிரம் கீர்த்தனைகளை நமக்கு தந்துள்ளார். அவர் நாளொன்றுக்கு, 1 லட்சத்து 8 ஆயிரம் முறை ராம ஜெபம் ஜெபித்து வந்தார். ராமஜெபம் ஜெபிப்பவர்களுக்கு கஷ்டங்கள் விலகி, கோடி புண்ணியங்கள் வந்து சேரும், என்றார். இதில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.