திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2765 days ago
ஊத்துக்கோட்டை: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது, தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.