தாண்டிக்குடியில் மழை வேண்டி வழிபாடு
ADDED :2766 days ago
தாண்டிக்குடி : தாண்டிக்குடியில் மழை வேண்டி நெல் அறைத்து பூசும் நுாதன வழிபாடு நடந்தது. கொடைக்கானலின் ஆன்மிக வழிபாட்டின் தாய் கிராமாக தாண்டிக்குடி உள்ளது. இங்கு பன்னாட்டு தெய்வங்கள் என அழைக்கப்படும் குடக்கு மந்தையில் மழை வேண்டி வருண பகவானை வழிபாடு செய்வது வழக்கம். மலைவாழ் மேளம் வாத்தியங்கள் முழங்ககிராமத்தில் மழை பொழிந்து விவசாயம் செழிக்க நெல் அறைத்து கல்லில் பூசுவர். அங்குள்ள பன்னாட்டு தெய்வங்களுக்கு வழிபாடு செய்து மழைக்காக வேண்டுதல் நடந்தது. கல்லில் பூசிய நெல் நன்கு மழை பொழிந்து கரைந்து விழ வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.