எரியோட்டில் சித்திரை விழா
ADDED :2763 days ago
எரியோடு: எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன், வீரநாகம்மன், கம்பிளி தாத்தப்பன், கிருஷ்ணர், ஏழு கன்னிமார், முனியப்பசுவாமி கோயிலில் சித்திரை விழா நடந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10ம் தேதி இவ்விழா இங்கு நடக்கிறது. இதற்காக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்.14ல் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். பண்ணைப்பட்டி கன்னிமார் கோயிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயில் வந்தனர். நேற்று காலை தீர்த்த அபிஷேகம், பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். வேடசந்துார் பரமசிவம் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்க தலைவர் அறிவாளிபங்கேற்றனர். ஏற்பாட்டினை ஒக்கலிகர் வெள்ளவர் குல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.