திண்டிவனத்தில் கைலாசநாதருக்கு சங்காபிஷேகம்
ADDED :2762 days ago
திண்டிவனம்: திண்டிவனத்தில், தில்லை கைலாசநாத பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. திண்டிவனம் ராஜ் மகாலில், தில்லை கைலாசநாதர் பெருமானுக்கு திருக்கல்யாண விழா, மூன்றாம் ஆண்டு குரு பூஜை, சங்கு அபிஷேகம் நடந்தது. சிவ ராமலிங்கம் தலைமையில், நேற்று காலை 11:45 மணியளவில் திருக்கல்யாணம், சங்கு அபிஷேகம் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சிவனடியார்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர், தில்லை கைலாசநாத பெருமாள் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை மகாசக்தி மக்கள் நல அறக்கட்டளை, தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அகத்தீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.