உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதுக்கரை கடற்கரையில் அகற்றப்படாத கழிவு

சேதுக்கரை கடற்கரையில் அகற்றப்படாத கழிவு

கீழக்கரை: சேதுக்கரை கடற்கரையில் தினமும் பக்தர்கள் புனித நீராடுவதற்காக வந்து செல்கின்றனர்.  தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் அதிகாலை முதல் இரவு வரை ஏராளமானோர் நீராடி, முன்னோர்களுக்கு பித்ருக்கடன், திதி  உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்கின்றனர். கடலில் குளித்துவிட்டு, உடுத்திய துணிகளை அப்படியே கடலிலும், கடற்கரையோரங்களிலும் விட்டுச் செல்கின்றனர். சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயில் முன் படித்துறையில் குவிந்து வருகிறது.  இந்த கழிவு துணிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !