பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் திறப்பு
ADDED :2763 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், உண்டியல் காணிக்கையாக, இரண்டு லட்சத்து, 98 ஆயிரத்து, 466 ரூபாய் இருந்தது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐந்து மாதத்துக்கு பின் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா தலைமை வகித்தார். ஆய்வாளர் மகேஸ்வரி, செயல் அலுவலர் சரவணபவன், பரம்பரை அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.கோவில் வளாகத்தில் உள்ள எட்டு நிரந்தர உண்டியலில், இரண்டு லட்சத்து, 98 ஆயிரத்து, 466 ரூபாய் காணிக்கை இருந்தது. தங்கம், 33 கிராம்; வெள்ளி, 86 கிராமும் இருந்தது. காணிக்கைகள் எண்ணும் பணியில், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.