உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் கன்னிகா ஜெயந்தி விழா

திருக்கழுக்குன்றத்தில் கன்னிகா ஜெயந்தி விழா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ஆரிய வைசிய சங்கத்தின் சார்பில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று, ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. திருக்கழுக்குன்றம், பெரிய தெருவில், பழமையான, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆரிய வைசிய சங்கத்தின் சார்பில், வாசவி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு, சித்திரை மாதம், ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, காலை, 6:30 மணிக்கு, மூலவருக்கு மஹா அபிஷேகமும், தீப, துாப ஆராதனைகளும் நடந்தன. தொடர்ந்து, 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !