அமர்நாத் யாத்திரை ஜூன் 28ல் தொடக்கம்
ADDED :2829 days ago
ஜம்மு: அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 28ம் தேதி துவங்குகிறது. இதுவரை 1 லட்சம் பக்தர்கள் யாத்திரைக்கு முன்பதிவு செய்துள்ளனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 28ம் தேதி துவங்குகிறது. இந்த யாத்திரை 60 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதுவரை அமர்நாத் யாத்திரை செல்ல 1 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.