உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்

பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா துவக்கம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை 10:10 மணிக்கு காப்பு கட்டுடன் துவங்கியது. ஏப். 29ல் நள்ளிரவு பெருமாள் ‘கள்ளழகர்’கோலத்தில்  வைகை ஆற்றில் இறங்குகிறார். இக்கோயிலில் நேற்று காலை 10:10 மணிக்கு மூலவர் பரமஸ்சுவாமி, உற்சவர் சுந்தரராஜப்பெருமாள், யாகமூர்த்தி உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. ஏப். 29 காலை 8:00 மணி முதல் 9:30 மணிக்குள் யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, சுந்தரராஜப் பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அன்று இரவு 2:00 மணிக்கு பெருமாள் ‘கள்ளழகர்’ திருக்கோலத்தில் பூப்பல்லக்கில்  வைகை ஆற்றில் இறங்குவார். ற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன்,  நாகநாதன், கெங்காதரன், கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !