கிருஷ்ணசாமி கோவிலில் 29ல் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :2762 days ago
நாமக்கல்: சேந்தமங்கலம் அடுத்த, காந்திபுரத்தில் உள்ள கிருஷ்ணசாமி என்கிற வெங்கடரமண சுவாமி சத்தியபாமா, ருக்மணி கோவிலில், வரும், 29ல் சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு நவக்கிரக ஹோமம், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் அம்சா, செயல் அலுவலர் ரமேஷ் செய்துள்ளனர்.