உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்திவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அந்திவாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர்: ஓசூர் அந்திவாடி மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அந்திவாடி பஸ் ஸ்டாப் அருகே, மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புணரமைப்பு செய்யப்பட்டு, நேற்று காலை கும்பாபி?ஷகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, கங்கை பூஜை, கணபதி பூஜை, கலச ஆராதனை, பிம்ப சுத்தி, கணபதி ஹோமம், தீர்த்த பிரசாத வினியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை, கணபதி பூஜை, பிம்ம பிரதிஷ்டாபனை, காலை, 9:20 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பஞ்சாமிர்த அபி?ஷகம், புஷ்ப அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ,சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !