ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் கோவிலில் 29ல் கும்பாபிஷேகம்
ADDED :2763 days ago
அந்தியூர்: அந்தியூர் அருகே, அத்தாணி, ஓடைமேட்டில், ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர், சடையப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வரும், 29ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக, 27ல், புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு நடக்கிறது. 28ல் கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. 29ல் அதிகாலை, 3:00 மணிக்கு கலச புறப்பாட்டை தொடர்ந்து, 4:30 மணி முதல், 5:00 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, சுவாமி அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.