பிரம்மதேசம் பொங்காளியம்மன் கோவிலில் குண்டம் விழா
அந்தியூர்: பிரம்மதேசம் பொங்காளியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம், பொங்காளியம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த, 11ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து அம்மனுக்கு நாள்தோறும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடந்த, 24ல் குண்டத்துக்கு தீ மூட்டப்பட்டது. இதையடுத்து நேற்று காலை, குண்டம் விழா நடந்தது. பிரம்மதேசம், அந்தியூர், வெள்ளையம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம் பாளையம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், வெள்ளை மற்றும் காவி உடையணிந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பிரம்மதேசம் பகுதியில், முக்கிய வீதிகள் வழியே, கம்பம் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஊர் பொதுக்கிணற்றில் விடும் நிகழ்வுடன், விழா நிறைவடைகிறது.