ராசாசுவாமி கோவிலில் கோ பூஜை விழா
ADDED :2763 days ago
பெருந்துறை: ராசாசுவாமி கோவிலில், கோ பூஜை விழா நேற்று நடந்தது. பெருந்துறை அடுத்த, வெள்ளோடு பகுதியில், 800 ஆண்டுகள் பழமையான ராசாகோவில் உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின், சமீபத்தில் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கோ பூஜை விழா, நேற்று நடந்தது. மூவேந்தர் மற்றும் ஆதிநாராயண குருக்கள், நாட்டுமாடு மற்றும் கன்றுக்குட்டிக்கு விசேஷ பூஜை நடத்தினர். விழாவில், திராளான மக்கள் கலந்து கொண்டனர்.